உன்னை எனக்குப் பிடிக்கவில்லை, உன்னைப் பார்த்தால் எனக்குக் கோபமாக வருகிறது என்றெல்லாம் அடுத்தவரிடம் கூறத்தானே தயங்கவேண்டும் ? யோசிக்க வேண்டும் ? ஆனால் மக்கள் அதை எளிதில் கூறிவிடுகின்றனர். உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும், உன்னுடைய இருப்பு எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது என்று அண்ணன் தம்பியிடமோ, ஒரு நண்பன் இன்னொரு நண்பனிடமோ, கணவன் மனைவியிடமோ அல்லது மனைவி கணவனிடமோ சக ஊழியரிடமோ ( கண்ணியமான முறையில் ) என்றெல்லாம் கூற மக்கள் யோசிப்பது கூட இல்லை. உலகத்தில் பல மனச் சிக்கல்களுக்கு இந்தத் தயக்கம் தான் மூல காரணம். தயவு செய்து இனியாவது வாய் விட்டுப் பேசித் தொலையுங்கள்.
அன்பை வெளிப்படுத்துங்கள். அன்பு என்பது ஏதோ பயிற்சி முறையில் வரவழைக்கப்படும் ஒரு உணர்வல்ல. உங்களின் தன்மையே அன்பும் ஆனந்தமும் தான். இதை யாரும் மறுக்க முடியாது. இல்லையா ?? அப்படி இருக்கும் போது அன்பு என்னும் இயல்பான விஷயத்தை ஏன் மறைக்க வேண்டும் ?? தவறாக நினைத்தால் நினைத்து விட்டுப் போகிறார்கள். அவர்கள் கிடக்கட்டும். நாம் அன்பை வெளிப்படுத்திக் காட்டுவோம். மூடி மறைக்கும் விஷயமல்ல அன்பு. யாருக்கும் தெரியாமல் செய்த தவறைத்தான் மூடி மறைக்க வேண்டும். அன்பின் இயல்பே பொங்கி வழிவது தான். அதை " நான் போய் எப்படி...?" என்று நினைத்துத் தடுத்து நிறுத்தாதீர்கள். வெட்கப்படுவதை விட்டு விட்டு நீங்களே முதலில் ஆரம்பியுங்கள். தவறு செய்தால் தான் வெட்கப்பட வேண்டும். அன்பை வெளிப்படுத்துவதற்கு அல்ல. மாற்றம் உங்களில் இருந்து துவங்கட்டும். உங்களைப் பார்த்து எல்லோரும் ஆரம்பித்து விடுவார்கள். அதனால் இனிமேல் உரையாடலின் முடிவில் இனிமேல் love you bro, love you sis, love you mom இடம் பெறட்டும். நான் சொல்வது உண்மை. இந்தச் சிறு அன்பு அனைத்தையும் திருப்பிப் போட்டு விடும். செய்து பாருங்கள். தயக்கம் வேண்டாம் !! LOVE YOU ALL !!
This entry was posted
on Monday, July 19, 2010
at 5:22 AM
. You can follow any responses to this entry through the
comments feed
.
