யோக அறிவியலின் ஆய்வுக்கூடம் !!  

Posted by Cibi S

 யோகா என்னும் அறிவியல் செயல்முறையின் ஆய்வுக்கூடம் நாம்தான். அதெப்படி ?? முதலில் 'நாம்' என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். 'நீங்கள்' என்று எதை அழைக்கிறீர்களோ அது மொத்தம் நான்கு தன்மைகளால் ஆனது. நான்கும் வாழ்வின் வெவ்வேறு விதமான பரிமாணங்கள். இந்த நான்கின் கலவையால் தான் வாழ்க்கை நிகழ்கிறது.  நாம் அறிந்து கொண்டவரை இந்த நான்கின் சரிவிகித கலவையே  உயிர்த்தன்மை. அவை உடல் ( body ), மனம்( mind ), உணர்ச்சி( emotions ), சக்தி நிலை( energy levels ) என்பதாகும். கொஞ்சம் கூர்ந்து கவனித்துப் பார்த்தால் முதலாவதை விட அடுத்தது சற்று சூட்சுமமான நிலையில் ( subtle state ) இயங்குவது புரியும். இந்த நான்கும் ஒன்றையொன்று சார்ந்தே இயங்குகிறது. அதாவது, நம் மனதில் பயம் தோன்றினால், இதயம் வேகமாக துடிக்கிறதே, அதைப்போல. உடலைப்பற்றி ஓரளவு புரிந்து வைத்திருப்பீர்கள். ஏனென்றால் நம் உடலைக்கொண்டே நம் உடலைப் பார்க்க முடிகிறது, தொட முடிகிறது. அதனால் நம் அனுபவத்தில் உடல் இருக்கிறது, இயங்குகிறது. உடலின் இயக்கம் பெரும்பாலும் பார்த்தல்,  கேட்டல், நுகர்தல், சுவைத்தல், தொடுதல் என்னும் இந்த ஐம்பொறிகளின் வாயிலாகவே நிகழ்கின்றது. இவைதான் இந்த உடலை உயிர்ப்போடு இருத்தி வைத்துள்ளது. இதைப்பற்றி இன்னும் ஆழமாக பிறகு பார்க்கலாம்.*


       பின்பு மனம். இது கிட்டத்தட்ட ஒரு software ஐப்போல. புலன்களின் வாயிலாக பெறப்படும் அத்தனை அனுபவங்களும், நினைவுகளும்  இந்த மனம் என்னும் software இல் பதிவாகின்றன. நமக்குத் தெரிந்த வரை  ஐம்புலன்கள் hardware என்றால் இந்த மனம் அதனுடைய software ஐப்போல. உடலளவில் என்னவெல்லாம் நடக்கிறதோ, அது அத்தனையும், ஒன்று விடாமல் மனத்தில் பதிவாகின்றன. பிறகு அங்கே response இற்கு ஏற்ற stimuli களை process செய்கிறது. இதுதான் மனம். பெரும்பாலானோருக்கு இந்த மனம் கண்டதைப் பொட்டு வைக்கும் ஒரு குப்பைத்தொட்டி போலத்தான் இயங்குகிறது. மனம் சாப்ட்வேர், உடல் hardware என்பதால் மனத்தில் நடப்பவை உடலிலும், உடலில் நடப்பவை மனத்திலும் பிரதிபலிக்கின்றன. 'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்ற பழமொழி கூட இதன் அடிப்படையில் தான் உருவானது. இந்த மனம் ஆய்வு செய்கிறது. பிரித்தறிந்து பார்க்கிறது. மனத்தின் இயல்பே ஒப்பிட்டுப் பார்த்துப் புரிந்து கொள்வதுதான். வெயில் இல்லாமல் அதனால் குளிரைப் புரிந்தது கொள்ளவே முடியாது. இனிப்பு இல்லாமல் அதனால் கசப்பை அறிந்து கொள்ளவே முடியாது. கொஞ்சம் ஆழ்ந்து கவனித்துப் பார்த்தால் இது புரியும். இது இப்படித்தான் design செய்யப்பட்டுள்ளது.

    அடுத்ததாக உணர்ச்சிகள். மனத்திலிருந்து உணர்ச்சிகளைப் பிரித்து அறிந்து பார்த்தால் இரண்டையும் இன்னும் நன்றாகப் புரிந்து kollalaam. மனம் என்பது வெறும் process செய்யும் இடம் மட்டுமே. அதை உயிப்போடு வைத்திருப்பது இந்த உணர்ச்சிகள் தான். இது மனத்தை விட சற்றே சூட்சுமமான தன்மையில் இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் மனத்தின் முடிவுகள் பெரும்பாலும் நிறைய மனிதருக்கு உணர்வுகளின் அடிப்படையிலேயே நிகழ்கின்றன. ஒரு உயிருக்குத் தீங்கு செய்வது என்பது மனத்திற்குத் தெரிகிறது. ஆனால் அதையும் தாண்டி நமக்கு அத உயிரினால் ஏதாவது தீங்கு நேர்ந்திருந்தால் அதற்குப் பழி வாங்கும் பொருட்டு திரும்பித் தீங்கிழைக்கும் ஒரு குணம் உணர்வுகளினால் வருகிறது. "அவன் என்னை அடித்தான் ; நானும் திரும்பி அவனை அடித்தேன்" என்றெல்லாம் வருவது இதனால் தான். நம் உணர்வுகளின் ஆதிக்க நிலைகளைப் பொறுத்து நம் ஒவ்வொருவரின் குண நலன்கள் அமைகின்றன. உங்களைச் சுற்றியே தினமும் உணர்வற்ற ஜட மனங்கள் எத்தனையோ சுற்றுவதைப் பார்க்கிறீர்கள். இல்லையா ? மனம் அற்புதமாக அழகாக வேலை செய்யும். ஆனால் அடுத்தவர் அன்பு செலுத்துவதைக் கூடப் புரிந்து கொள்ள இயலாத எத்தனையோ தெய்வீகமான மனிதர்கள் இருக்கிறார்கள்.  மகிழ்ச்சி, வெறுப்பு, கோபம், காமம், எரிச்சல், சலிப்பு, துக்கம், சோர்வு இவையெல்லாம் உணர்வுகளின் தாக்கங்களே. இந்த உணர்வுகளின் இயல்புகளைப் பொறுத்து நம் மனத்தின் செயல்பாடுகளும், முறையே நம் உடலின் செயல்பாடுகளும் அமைகின்றன. இந்த உணர்ச்சி நிலைகளின் மாற்றம் உடலளவில் ரசாயின மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அதற்குத் தகுந்தாற்போல் மனம் செயல் படுகிறது. அதாவது ஏற்கனவே சொன்னது போல ஒன்றின் மாற்றம் மீதி இரண்டிலும் பிரதிபலிக்கிறது. நம் உடல் என்பதே நாம் இதுவரை உட்கொண்டுள்ள உணவின் கட்டமைப்பாக உள்ளதால், நம் மனத்தையும் உணர்ச்சிகளையும் சரியான முறையில் வைத்திருக்கும் சக்தி நாம் உட்கொள்ளும் உணவிற்கு இருக்கிறது. இதையும் பற்றி விரிவாக பிறகு பார்க்கலாம்.

      பின்பு சக்தி நிலை. இதைப்பற்றி ஆழமாக அடுத்த பதிவில் பார்க்கலாம். சுருக்கமாகச் சொன்னால், நாம் இரவு நன்கு தூங்கி காலையில் எழுந்தால், நம் உடல் எப்படி இருக்கிறது ? நம் மனம் எவ்வளவு சுறு சுறுசுறுப்பாக வேலை செய்கிறது ? நாம் எவ்வளவு உற்ச்சாகமாய் இருக்கிறோம் ? ஆனால், நாள் முழுதும் வேலை செய்துவிட்டு ஓய்ந்து இரவு படுக்கைக்கு வந்தால் நம் உடல், மனம், உணர்வு எல்லாம் எப்படி இருக்கின்றன ? இந்த ஒரு diffference in energy தான் சக்தி நிலை. நம்முடைய சக்தி நிலையை சற்றே மேம்படுத்திக்கொள்ள oxygen எனப்படும் ப்ரான வாயு உதவுகின்றது. இது கொஞ்சம் ஆழமா அறிவியல். அடுத்த பதிவில் இதன் கட்டமைப்பையும், நிலைகளைப் பற்றியும் பார்க்கலாம்.
 இந்த நாளும் வாழ்க்கையின் நாலு தூண்கள். இந்தத் தூண்களை ஆதாரமாக வைத்துத்தான் வாழ்க்கை நடக்கின்றது. அதனால்தான் யோக பாரம்பரியத்தில் வாழ்வின் இந்த நான்கு தன்மைகளையும் யோகத்தை நோக்கிச் செலுத்துவதற்காக முறையே,

  •   கர்ம யோகம் - செயல்களைச் செய்வதனால் யோகத்தன்மையை அடையும் தொழில்நுட்பம்
  • ஞான யோகம் - அறிவை விரிவாக்குவதால் மனத்தை யோகத்தன்மையை அடைவிக்கும் ஒரு தொழில்நுட்பம் 
  • பக்தி யோகம் - உணர்ச்சி நிலைகளை மேம்படுத்தி யோகத்தை அடைவிக்கும் ஒரு தொழில்நுட்பம் 
  • ராஜ யோகம் ( என்கிற கிரியா யோகம் ) - சக்தி நிலைகளை மேம்படுத்தி யோகத்தை நோக்கிச் செலுத்தும் ஒரு தொழில்நுட்பம்


ஆக, இந்த நான்கின் சரிவிகித கலவை தான் யோகா. வாழ்வின் நான்கு வெவ்வேறு விதமான தன்மைகளையும் ஒருமையை, யோகத்தை நோக்கிச் செலுத்த நான்கு வெவ்வேறு விதமான தொழில்நுட்பங்கள் யோக பாரம்பரியத்தில் கற்பிக்கப்படுகின்றன. பகவத் கீதையின் மொத்தமுமே இதன் விரிவாக்கம் தான். கிருஷ்ணர் என்னும் ஒரு அற்புதமான மனிதரால் யோகா என்னும் உள்நிலை அறிவியல் அவருடைய சீடரான அர்ஜுனனுக்குக் கற்பிக்கப்பட்டது. வெவ்வேறு கலாச்சாரத்தில் வெவ்வேறு விதமான வாழ்க்கை முறைகளில் இருந்து  ஞானம் அடைந்த எந்த ஒரு மனிதராலும் இந்த அறிவியல் தான் கற்பிக்கப்பட்டது. இந்தியப் பாரம்பரியத்தில் அகத்தியர், பதஞ்சலி, ஸ்ரீ கிருஷ்ணர் போல மற்ற கலாச்சரங்களிலும் இருந்திருக்கின்றனர். இயேசு கிறிஸ்து யோகா தான் சொல்லிக் கொடுத்தார். நபிகள் நாயகம் யோகா தான் சொல்லிக் கொடுத்தார். புத்தர் கூட இதைத்தான் சொல்லிக் கொடுத்தார். இவர்கள் எல்லாம் ஞானம் அடைந்த்தவர்களே. பிற்காலத்தில், அதை அடுத்த தலைமுறைக்கு எடுத்து சென்றவர்களின் பொறுப்பற்ற அணுகுமுறைகளால் ஒரு காலத்தில் எது உயர்ந்த அறிவியலாக இருந்ததோ, அதுவே சடங்குகளாகவும், மூட நம்பிக்கைகளாகவும் மாற்றப்பட்டன.

யோகாவின் வரலாறு :  

Posted by Cibi S

யோகா என்பது எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தையும் சார்ந்தது அல்ல. யோகா இந்திய கலாச்சாரத்தில், இந்திய பாரம்பரியத்தில் பிறந்த்திருந்தாலும் அது இந்தயாவுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. அதே போல இந்து மதத்துக்கும் சொந்த்தமானது அல்ல. ஏனெனில் இது ஒரு நம்பிக்கையோ அல்லது கோட்பாடோ அல்ல. இது ஒரு அறிவியல். அதனால் எப்படி ஒரு விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்ட எந்த ஒரு கண்டுபிடிப்பும், ஜாதி மத, இன வேறுபாடின்றி அதை அப்படியே ஏற்றுக் கொள்கிறோமோ, அதே போல நாம் இந்த யோக அறிவியலையும் ஏற்றுக் கொள்வது புத்திசாலித்தனம்.  ஆனால் யோக அறிவியலின் பயன் மற்ற கண்டுபிடிப்புகளைப் போல சாதாரண அளவோடு நின்று விடாமல்  இது கற்பனைக்கும் எட்டாத பலன்களையும் சாத்தியங்களையும் அள்ளித் தரும்.

              இது மற்ற அறிவியல்களைப் போல அல்லாமல் உள் அறிவியலாக இருப்பதால், இதை ஒரு set of instructions, formats போல கொடுத்தால் செயல்படாது. இதை ஒரு சரியான மூலத்திடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். இது ஏதோ புத்தகம் படித்துத் தெரிந்து கொள்ளக் கூடியதோ, போதனை கேட்பதால் தெரிந்து கொள்ளக் கொள்ளக் கூடியதோ அல்ல. தெரிந்து கொள்ளலாம். ஆனால் இதை அனுபவப் பூர்வமாக உணர்ந்து கொள்ள முடியாது. இது மிகவும் உயிரோட்டமான ஒரு தன்மையாக இருப்பதால் இதை ஒரு சரியான இடத்திலிருந்து வாங்கிக்கொள்ள வேண்டும்.

            சரி இந்த யோகாவை முதன்முதலில் கண்டுபிடித்தது யார் ? எங்கு எப்போது எப்படிக் கண்டு பிடிக்கப்பட்டது ? 

யோகாவின் வயது என்ன ? 

யோகா என்பது யாராலும் கண்டு பிடிக்கப்பட்டது அல்ல. எப்படி புவியீர்ப்பு விசை என்பது மனிதர்கள் அதைப்பற்றி அறிந்திருந்தாலும் இல்லாவிட்டாலும், அல்லது மனிதகுலமே அதைப்பற்றி மறந்து போனாலும் அது இங்கே இருக்குமோ, அதே போல யோகாவும் நிலையானது. இதை யாரும் கண்டுபிடிக்க வில்லை. ஆனால் அநாதி காலம் முன்பே உணர்ந்து கொள்ளப்பட்டது. யோகாவின் வரலாற்றைப் பார்க்க வேண்டுமென்றால் நாம் குறைந்தது ஒரு 50,000 வருடங்களாவது பின்நோக்கிச் செல்ல வேண்டும். அந்தக் நேரத்தில் இந்த பூமியின் மாற்றி பகுதிகளில் எல்லாம், மனிதஇனம் அப்போதுதான் தன்னுடைய காட்டுமிராண்டித்தனத்தை விட்டுவிட்டு நாகரிகம் அடைந்தது தன்னுடைய அடிச்சுவடிகளை உலகத்தின் மற்ற பகுதிகளில் பதித்துக் கொண்டிருந்த நேரத்தில், இங்கே, நம் பாரத தேசத்தில் வாழ்ந்த மக்கள், இந்த வாழ்க்கையைப் பற்றி, படைப்பைப் பற்றி, படைப்பின் மூலத்தைப்பற்றி அறிந்து கொள்ள முயன்றனர். வெறும் கதைகளாக அல்லாமல், நம்பிக்கைகளாக அல்லாமல், கோட்பாடுகளாக அல்லாமல் உள்ளதை உள்ளபடியே உணர்ந்து கொள்ள முயன்றனர். ஏனெனில் எதைப் பற்றி உங்களுக்கு ஒன்றும் தெரியாதோ அதைத்தான் உங்களால் நம்ப முடியும். இப்போதும் கூட, உலகில் பெரும்பாலான மக்கள் இப்படி நம்பி நம்பியே தங்கள் முழு வாழ்க்கையையும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அதனால் நாம் முன்னமே பேசியிருப்பது போல அவர்கள் எதை நோக்கி, எதற்காக தங்கள் முழு வாழ்க்கையையும் நகர்த்துகிறார்களோ அது அவர்களுக்குக் கிடைப்பதில்லை. வெறுமனே நம்புவதால் எந்தப் பெரிய மாற்றமும் நம் வாழ்வில் வந்து விடப்போவதில்லை. இருப்பதை அப்படியே உணர்ந்து கொண்டால் எதற்காக நம்ப வேண்டும் ? அதனால் அந்த மக்கள் வெறுமனே எதையும் நம்பாமல், அதை ஒரு மேலான தளத்திலிருந்து உணர்ந்து கொள்ள விரும்பினர். இந்த இயற்கையான தேடுதல் தான் மனிதனின் தன்மை மற்ற உயிரினங்களைக் காட்டிலும் ஒரு உயர்ந்த தளத்தில் வைத்திருக்கிறது. இந்த ஒரு தேடுதலும், உள்ளுணர்வும் தான் நம்மைக் குரங்கிலிருந்து பிரித்தெடுத்து தனி ஒரு உயிரினமாக வளரச்செய்தது.  இதுதான் பரிணாம வளர்ச்சியின் அடிப்படைக் காரணம். இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை. இந்த உந்துதல் மற்றும் தேடுதலின் உச்சம் தான் இப்போது நீங்களாகவும் நானாகவும் இங்கே உட்கார்ந்துகொண்டிருக்கிறது. ஆனால் அப்போதும் இந்தத் தேடுதல் நிற்கவில்லை. அதனால் தான் மனித இனம் நாகரிகத்தை நோக்கிச் சென்றது. மனிதன் பச்சையாக உண்பதை விட்டுவிட்டு சமைத்து உண்ண ஆரம்பித்தான். இதில் தொடங்கி இன்று மனித இனம் அடைந்துள்ள தொழில்நுட்ப வளர்ச்சி வரை எல்லாமே அந்த உந்துதலின் விளைவு தான். இதே உந்துதலின் அடிப்படையில் தான் நம் முன்னோர்களும் வளர்ந்த்தனர். ஆனால் அவர்கள் கொஞ்சம் ஆழ்ந்து, சற்று உள்நோக்கி வளர்ந்த்தனர். அவர்களின் தேடல் உள்முகமாக இருந்தது. அவர்கள் ஏன் வெளியில் தேடாமல் உள்நோக்கித் தேடினர் என்பதைப் பிறகு பார்ப்போம் ! அந்தத் தேடுதலின் விளைவாகக் கிடைத்தது தான் யோகா ! சரி, இந்த எப்படி நம் வரைக்கும் வந்தது ?
         அந்தக் கால கட்டத்தில் இப்போது இமயமலைப் பகுதி அமைந்துள்ள இடத்திற்கு ஒருவர் வந்தார். அவர் யார்,அவரின் பெயர் என்ன, எங்கிருந்து வந்தார், அவரின் பெற்றோர் யார், அவரின் குழந்தைப் பருவம் எப்படி இருந்தது என்பனவெல்லாம் யாருக்கும் தெரியாது. அவர் இருந்தார், அவ்வளவு தான். அவர் அங்கே கண் மூடி அமர்ந்தால், அவர் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுக்கும். அதை வைத்துத்தான் அவர் உயிரோடு இருக்கிறாரா,  இல்லையா என்பதை அறிந்து கொள்ள முடியும். 
       அவர் தான் முதல் யோகி. யோகி என்றால் யாருடைய அனுபவத்தில், ஒரு புரிதலாக இல்லாமல், அனுபவத்தில் அவரைச் சுற்றியுள்ள அனைத்துமே, அவருக்குள் ஒரு பாகமாக விளங்குகிறதோ, இந்த பிரபஞ்சமே தன்னில் ஒரு அங்கமாக இருக்கிறதோ அவருக்கு யோகி என்று பெயர். அவர் முதலாவது யோகியாதலால் அவர் ஆதியோகி என்று அழைக்கப்பட்டார். எப்படி அவர் முதல் யோகி ஆனார் ? அவருக்கு மட்டும் என்ன விசேஷமாக நடந்தது ?  அவருக்குள் மிகவும் அற்புதமானதாக  ஏதோ ஒன்று நிகழ்ந்தது. இந்த உலகத்தில் இதுவரை எது உண்மையாலுமே அற்புதமானதோ, எதைநோக்கி எல்லா மனிதர்களின் தேடலும் இயற்கையாகவே செல்கிறதோ, அது அவருக்குள் தானாகவே மலர்ந்தது. அந்த நிகழ்வால் அவர் வாழ்வின் பரிமாணம் மனிதத் தன்மையிலிருந்து கடவுள்தன்மை நோக்கிச் சென்றுவிட்டது. இதைப்பற்றி இன்னும் விரிவாக பிறகு பார்ப்போம். 
    அவரிடமிருந்து இதைப்பெற்றுக்கொள்ள மிகவும் விரும்பிய ஏழு பேர் 84 வருடங்களாக கடும் முயற்சி செய்தனர். அதன் பலனாக, மிகப்பெரிய காத்திருப்பின் விளைவாக, ஒரு தட்சிணாயன காலத்தில் வந்த ஒரு பௌர்ணமியன்று, இப்போது இருக்கும் யமுநோத்ரிக்கு சில அடிகள் மேலே உள்ள காந்தி சரோவர் ( 'அருள் நிறைந்த நீர்ப்பரப்பு'  என்று பொருள்படும் ) என்னும் ஏரியின் கரையில் தெற்கு நோக்கி அந்த அற்புதத்தை இந்த ஏழு பேருக்கு ஆதியோகி வழங்கினார். அன்றுதான் ஆதியோகி, வெறும் யோகியாய் இருந்து ஒரு குருவின் தன்மைக்கு உயர்ந்தார். அந்த தினத்தைத் தான் ஒவ்வொரு வருடமும் யோக பாரம்பரியத்தில் "குரு பூர்ணிமா" வாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 
      அந்த ஏழுபேரில் ஒருவர் தான் அகத்திய முனிவர். அவர்தான் யோகாவை ஒரு மதமாக அல்லாமல், ஒரு நம்பிக்கையாக அல்லாமல், ஒரு அறிவியலாக தென்னிந்தியா முழுவதும் ஒவ்வொரு கிராமமாக சென்று பரப்பியவர்.
      அப்போதிலிருந்து இந்த யோக அறிவியல் குரு-சிஷ்ய பாரம்பரிய முறையில் தொடர்ந்து பரப்பப்பட்டு, இப்போது நம் வரை இது வளர்ந்து இருக்கிறது. இப்போது இந்திய மட்டுமல்லாது, ஏனைய எல்லா நாடுகளிலும் மிகத் தீவிரமாக கற்பிக்கப்பட்டும் கற்றுக்கொடுக்கப்பட்டும் வருகிறது. இப்போது இருக்கும் இன்றைய சமூக சூழலில் யோகா கற்பது மிகவும் அவசியமாகிறது. 
      ஏற்கனவே கூறியது போல இது ஒரு அறிவியலாதலால் இது ஒரு செயல்முறையாகத்தான் அறிந்து கொள்ள முடியும். அதனால் இதற்காகவே பிரத்தியேகமான ஒரு ஆய்வுக் கூடமும் உண்டு !! அது என்ன ??  

யோக அறிவியல் :  

Posted by Cibi S

   யோகா என்னும் வார்த்தையின் நேரடிப் பொருள் " சங்கமித்தல்" அல்லது "இணைதல்" அல்லது "அனைத்தும் ஒன்றாதல்" என்பதாகும். உங்களைச் சுற்றியுள்ள அனைத்தும் உங்களில் ஒரு பாகமாக விளங்கும்போது நீங்கள் யோக நிலையில் உள்ளீர்கள் என்று பொருள். 

           சரி, ஆனால் எது எதனோடு இணைய வேண்டும் ?,எது எதனோடு சங்கமிக்க வேண்டும் ? "நாம்" என்று எதைக் கூறுகிறோமோ அதுவும், இந்தப் பிரபஞ்சமும் இணைவது, அல்லது நீங்கள் உங்களோடு இணைவது, அல்லது நீங்கள் இந்தப் படைப்பின் மூலத்தோடு இணைவது என்று இதற்கு எப்படி வேண்டுமானாலும் பொருள் கொள்ளலாம். 


          எப்படி உங்கள் கையில் உள்ள ஐந்து விரல்கள் உங்கள் அனுபவத்தில் உங்களில் ஒரு பாகமாய் விளங்குகிறதோ, அதே போல இந்த மொத்த பிரபஞ்சத்தையும் உங்களில் ஒரு பாகமாக, அனுபவப்பூர்வமாக உணரவைப்பதே யோகாவின் குறிக்கோள்.
         சரி, ஆனால் அப்படி உணர்ந்து என்ன செய்வது ? உங்கள் கை விரல்களை எப்படிப் பாதுகாப்பது, எப்படி சுத்தம் செய்வது, எப்படி அதை இனிமையாக, எந்தத் துன்பமும் வராமல் பார்த்துக் கொள்வது என்று யாராவது சொல்லித்தர வேண்டுமா ? போதனை செய்ய வேண்டுமா ? தேவையில்லை, இல்லையா ? ஏனெனில் அது உங்கள் அனுபவத்தில் உங்களில் ஒரு பாகமாய் விளங்குகிறது. அதேபோல் இந்த மொத்த பிரபஞ்சத்தையும் உங்களில் ஒரு பாகமாக உங்கள் அனுபவத்தில் உணர்ந்து விட்டால், "அவனைக் கொல்லாதே", "இது நல்லது", "இது இனிமையானது", "இது தீங்கைத் தரும்" என்று உங்களுக்கு போதிக்க வேண்டிய அவசியம் இல்லை, அப்படித்தானே ? உலகமே இவ்வாறு இருந்து விட்டால், இந்த பூமியே வாழ்வதற்கு எவ்வளவு அற்புதமான இடமாய் மாறிவிடும் ? இதற்காகத்தான் யோகா.
         ஒவ்வொரு மனிதனும் தனக்குள் இருக்கும் எல்லை இல்லா ஆனந்தத்தை உணர, வாழ்கையை, அதன் தன்மையை அப்படியே உணர, அதன் போக்கை முழுதுமாய் அவன் கையில் எடுத்து, ஒரு அற்புதமான, ஆனந்தமான வாழ்க்கை வாழ்ந்து, அதன் மூலம், மனித உயிரை, அதன் தன்மையை எவ்வளவு உயரத்திற்குக் கொண்டு செல்ல முடியுமோ, அவ்வளவு உயரத்திற்குக் கொண்டு செல்வது தான் யோக அறிவியலின் அடிப்படை நோக்கம்.
        யோகா என்பது ஒரு தனிப்பட்ட செயல் அல்ல. நீங்கள் எப்போதுமே எதனோடாவது இணைந்தே இருக்கிறீர்கள், இல்லையா ? இந்த வானத்தோடு, இந்த பூமியோடு, காற்றோடு, இந்த உலகத்தோடு என்று எப்போதுமே எதனோடாவது நீங்கள் இணைந்தே இருக்கிறீர்கள். உங்களின் இந்த இணைதல் தற்செயலாக நடக்கிறதா அல்லது மிகுந்த விழிப்புணர்வோடு நடக்கிறதா என்பதுதான் கேள்வியே.
 இந்த இணைதல் தற்செயலாக நடந்ததால் நீங்கள் சாதாரண உயிராக இந்த பூமியில் தோன்றி மறைவீர்கள். இது விழிப்புணர்வோடு நடந்தால் உங்கள் வாழ்க்கை, உங்கள் உயிர்ப்பு நிலை, இந்தப் பிரபஞ்சத்தின் எல்லைகளைக் கடந்தாகி விடுகிறது.
 இவ்வாறு இந்த எல்லைகளைக் கடந்த, விழிப்புணர்வின் உச்ச நிலையை எட்ட யோகா உதவுகிறது. 
யோகாவின் முழு சாராம்சமே இதுதான். இது ஒரு தத்துவமல்ல. இது ஒரு உடற்பயிற்சி அல்ல. இது உங்கள் முழு அனுபவம். யோகா உங்களுக்குள் நிகழ்ந்தால் உங்கள் வாழ்வின் தன்மையே மாறிவிடும். மிகவும் அற்புதமாக, ஆனந்தமாக, துடிப்பாக, இளமையாக. இதனால் தான் யோகா ஒரு வாழ்க்கை முறை என்று பேசப்படுகிறது. 
        எனினும் யோகா என்பது ஒரு மருத்துவ முறை அல்ல. யோகாவின் நோக்கம் வேறாய் இருப்பினும், இதன் பின் விளைவுகள் நம் உடலுக்கு மற்றும் மனதுக்கு மருத்துவ ரீதியாய் குணமளிப்பதால் இதனை ஒரு மருத்துவ முறையாகக் கூட பார்க்கப் படுகிறது.
    உங்கள் வாழ்வின் பொருள்தன்மையைத் தாண்டிய ஒரு பரிமாணம் நிகழ வேண்டுமென்று நீங்கள் உண்மையாகவே விரும்பினால், நீங்கள் மனித வாழ்கையில், கனவில் கூட சாத்தியமாகாது என்று நினைத்துக் கொண்டிருக்கிற விஷயங்களை உங்கள் கண்முன், உங்கள் அனுபவத்தில் நிகழ வேண்டுமென்று ஆசைப்பட்டால், உங்கள் வாழ்க்கை ஆனந்தமாக, என்றென்றும் குதூகலமாக, என்றென்றும் கொண்டாட்டத்தோடு, நீங்காத இளமையோடு இருக்கவேண்டுமென்று நீங்கள் ஏங்கினால் வாருங்கள் !! என்னோடு சேர்ந்து யோகா கற்றுக்கொள்ளுங்கள் !! உங்களில் மலருங்கள் !!

துரதிர்ஷ்டவசமாக யோகா என்றாலே, ஆன்மிகம் என்றாலே காவி அணிந்து ருத்ராட்சம் அணிந்து காட்டுக்குச் செல்வது என்ற ஒரு கருத்து நிலவி வருகிறது. ஆனால் உண்மையில் அப்படியல்ல. யோகா என்பது நிச்சயம் இளமையானவர்களுக்கு.வாழ்க்கையை அனுபவிக்குத் துடிக்கும் உயிர்களுக்கு, வாழ்க்கையை அதன் உச்சத் தன்மையை அப்படியே உணர்வதற்கு யோகா துணைபுரிகிறது. யோகா மிகவும் கலர் புல்லானது. நீங்கள் இந்தப் பூமியில் வாழ்வதற்கு மிகவும் புத்திசாலித்தனமான அணுகுமறை யோகா !
          அதனால் நீங்கள் இன்னும் கலக்கலாக, இன்னும் துடிப்பாக, இன்னும் சந்தோஷத்தோடு இருக்க வேண்டுமானால் யோகா பயிலுங்கள் !!
இதுவரை உங்கள் மனதில் யோகாவைப் பற்றி நீங்களாக வைத்திருந்த அபிமானங்கள், சிந்தனைகள், mindsets, எல்லாவற்றையும் தூக்கி எரிந்து விட்டு, அதனை நேரடியாக அனுபவிப்பதற்குத் தயாராகுங்கள் !! 
யோக அறிவியல் 
          

WHAT IS YOGA ?  

Posted by Cibi S

If your body goes in search of a relationship, we call this sexuality. If your mind goes in search of a relationship, we call this companionship. If your emotion goes in search of a relationship, we call this love. If your energies goes in search of a relationship, we call this yoga .

THE SCIENCE OF YOGA  

Posted by Cibi S

"Yoga is the path towards the union of our bounded self with our ultimate nature. This union results in self-realization"
Yogic science not only provides knowledge about the underlying basis of metaphysical principles and ethical values, but it also provides the necessary tools to completely transform human nature. Its aim is to bring about perspectives beyond intellectual understanding, and to foster experiences that bring life into a new dimension of perception.

The emphasis of yoga therefore is not on the external and perceivable areas of endeavor, which lead to bondage and limitation, but on the inner and intangible fields, which lead to freedom and perfection. It involves the transformation of a limited being into an unbounded one.
Yoga is both a philosophy and a science. The philosophy and the science of yoga are not only intertwined and inseparable, they also reinforce each other. The philosophy emphasizes the existence of the Self within. The science is the method that verifies this doctrine by setting out certain kinds of discipline, certain techniques and practices that enable the emergence of the true being within us.
Yoga is the path towards the union of our bounded self with our ultimate nature. This union results in self-realization - Mukti or Nirvana. Through perfect yoga this freedom is attained. Yoga is not something one does; it is the medium of one becoming the crucible of self-transformation. It is not a practice, but a certain way to be.
Yoga deepens, broadens and strengthens the visionary power of the mind. It opens the door of that realm of sensing beyond the five senses.

YOGA : AN INTRODUCTION  

Posted by Cibi S

"Yoga transforms and liberates human beings so that they can reach this unbounded state !!"

There is a beautiful story about a caterpillar that lived much of its life believing that it had come into being only to eat and sleep and do what the rest of the caterpillars did. However it was unhappy. Somehow it sensed that its life had another dimension not yet experienced.
One day, driven by a strange longing, it decided to become still and silent. It hung from the branch of a tree, weaving a cocoon around itself. Inside the cocoon, although constrained and uncomfortable, it waited, sensing and aware. Its patience bore fruit, for when the cocoon burst open, it was no longer the lowly worm that went in, but a beautiful, resplendent, winged butterfly which dazzled the sky. It soared and flew, no longer limited to its worm-like existence, but free and unbounded. The caterpillar had been transformed into a thing of air and lightness, magic and beauty.

Once the transformation had taken place, it was impossible for the butterfly to return to being a worm. In the cocoon, the caterpillar had become one with its inner being and in this union it reached its ultimate nature. What happened in the cocoon can be described as yoga. Yoga is the path towards being boundless.
Yoga transforms and liberates human beings so that they can reach this unbounded state. Humans, unlike animals, are not merely existing. They are becoming. To evolve as a human being is to become aware of one's limitations; to strive, with intense passion, towards the transcendence for which we all have the potential.

YOGA  

Posted by Cibi S

I want you to know that there is another kind of science, the inner science - the yogic science, through which you can become the master of your own destiny !

இப்போது பரவலாக எல்லோராலும் பேசப்படும் ஒரு வார்த்தை யோகா. மருத்துவரிடம் சென்றால் யோகா செய்யச் சொல்லுகிறார்கள், பிட்னஸ் கிளினிக் சென்றால் யோகா பழக சொல்லுகிறார்கள். மேற்க்கத்திய நாடுகளில் இப்போது யோகா தீவிரமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் கூட ஆங்காங்கே யோகா நிறுவனங்கள், யோகா பயிற்றுவிக்கும் பயிற்சிப் பள்ளிகள், ஆசிரமங்கள் என எத்தனையோ விஷயங்கள் யோகாவை முன்னிலை படுத்தி நடந்து கொண்டிருக்கின்றன.
அதெல்லாம் இருக்கட்டும் !! முதலில் இந்த யோகா என்றால் என்ன ? நமக்குத் தெரிந்ததெல்லாம், காலை நேரத்தில் டி.வி.யைத் திருப்பினால் யாரோ ஒரு வயதானவர் அமர்ந்து கொண்டு ஏதோ பேசிக்கொண்டிருப்பார். அவருக்கு முன்னால் இருவர் அமர்ந்து கையைக் காலை இப்படியும் அப்படியும்  திருப்பிக் கொண்டிருப்பார்கள். அவ்வளவுதான்
ஆனால் உண்மையில் யோகா என்றால் என்ன ? யோகா என்னும் இந்த மிகப் பழமை வாய்ந்த அறிவியலை, ஆனால் இன்றும் புதுப் பொலிவுடன் திகழும் இந்த விஞ்ஞானத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள கீழே உள்ள இந்த இணைப்புகளைப் பார்க்கவும்.
 

என் கல்லூரி வளாகம் !!  

Posted by Cibi S

எல்லோரும்  பாதையின் முடிவில் தான் ஆனந்தம் இருப்பதாக எண்ணிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்களுக்குப் பாதையின் போக்கிலேயே ஆனந்தம் இருப்பதை உணரமுடிவதில்லை. நீங்கள் பார்த்திருக்கலாம். தினமும் காலையில் சாலையில் மக்கள் வேக வேகமாக எதையோ ஓடிச் சென்று பிடிப்பதைப் போல ஓடிக்கொண்டிருப்பர். நேரமாகிவிட்டது என்பது வேறு. ஆனால் சரியான நேரத்திற்குப் போய்க்கொண்டிருந்தால் கூட ஏதோ olympic இல் fast walking இற்கு மெடல் வாங்குவதைப் போல ஓடிக்கொண்டிருப்பார்கள். கேட்டால் இவர்கள் வாழ்கையை சீரியஸ் ஆக அணுகுகிறார்கலாம் !!! நீங்கள் வாழ்கையை சீரியஸ் ஆகவே அனுகுங்கள். அதற்காக எதற்கு மனிதனின் மிகச் சாதாரண அசைவை, நடையை ஏன் ஒரு வேலையாகச் செய்ய முயற்சிக்கிறீர்கள் ?? நடப்பது ஒரு இயல்பான விஷயம். அதை வெறிப்பிடித்துச் செய்ய வேண்டிய அவசியம் இல்லையே ?? நிறைய பேர் இப்போது நடப்பது கூட இல்லை என்பது வேறு விஷயம். நான் சொல்வது என்னவென்றால், நீங்கள் ஒரு வேலை நிமித்தமாக நடந்து செல்ல நேர்ந்தால் நடப்பதை ஒரு வேலையாகச் செய்யாமல் அதை நீங்கள் ஆனந்தமாக இருப்பதற்குக் கிடைத்த மற்றொரு வாய்ப்பாகக் கருதி ஒவ்வொரு அடியையும், ஆனந்தமாக அற்புதமாக எடுத்து வையுங்கள் !!அதில் கிடைக்கும் சந்தோஷத்தை விட, கட கட வென்று ஓடி அந்த இடத்திற்குச் சீக்கிரமே செல்வதால் கிடைக்கும் சந்தோஷம் சிறப்பானதல்ல என்பது தான் உண்மை. நேரமாகிவிட்டதேன்றால் தவறில்லை... ஓடகூட செய்யலாம்...
ஆனால் சரியான நேரத்திற்குச் சென்றால் கூட எதற்காக பர பரப்போடு திரிய வேண்டும் ??

என்னடா இது நடப்பதற்குக் கூடவா இவ்வளவு பேச வேண்டும் என்று கேட்பது தெரிகிறது !! ஆனால் இப்படி வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் ஆனந்தத்தைத் தேடிக்கண்டுகொண்டுவிட்டால் அதற்கு மேல் வாழ்க்கையைப் பற்றிப் புரிய வேண்டியது எதுவும் இல்லை !!
இதை எழுதுவதற்குக் காரணம், என் கல்லூரி வளாகம் தான் !! அது ஒரு wonderland மாதிரி இருக்கும். என்னுடன் பயிலும் சக மாணவர்கள் யாரும், என் கல்லூரி  வளாகத்தில் அந்தக் காலை நேர நடையில் இருக்கும் அற்புதத்தை ரசித்ததில்லை என்றே நினைக்கிறேன் !!
என் அறையில் இருந்து வகுப்பிற்குச் செல்லும் அந்தப் பத்து நிமிட பயணம் தான், அந்த நாள் முழுவதற்கும் வேண்டிய உற்சாகத்தைத் தருகிறது... சுற்றிலும் மலைகள், வழி எங்கும் அழகழகான மரங்கள், புள் தரைகள், விதவிதமான வண்ண மயமான பூச் செடிகள்... கல் சுவரைப் படர்ந்து நிற்கும் கொடிகள், பெயர் தெரியாத பறவைகள், வண்ணத்துப் பூச்சிகள்... ஆஹா... எவ்வளவு அற்புதம் தெரியுமா ?? அதனால் அந்த நேரத்தின் தனிமைமகவும் ஆனந்தமாக இருக்கும் !! அந்த நிசப்தத்தில் அந்த செடி கொடிகள் அத்தனையும் நம்மிடம் பேசுவது போலவே இருக்கும்,.... அதன் உயிர் தன்மையை அப்போது நன்கு உணர முடியும்.. இது கூட ஒரு வகை யோகா தான் !!!




 

Posted by Cibi S

 நிறைவை நோக்கி ஓடுவதல்ல ஞானம். நிறைவு இங்கேயே இப்போதே உள்ளது என்று உணர்வதுதான் ஞானம்.

Krishna- What exactly life means  

Posted by Cibi S

Everything which is beyond our normal perception is always blue !! The sky is blue, the oceans are blue. And so Krishna is also blue. Yes !! He is beyond the normal understanding of life ! Understanding Krishna means understanding life !! Understanding Krishna is not a kind of devotion, perhaps but rather its an intelligence, the intelligence which exactly life wants, which exactly life expects from us. Because the very way of His life is an expression of joy, simply joy. If you are in that state of joy, you 'll lead a life as Krishna led.  Krishna leela, often called as the play of Krishna, is all about treating the most serious aspects of life very playfully. Worshiped as a God, the incarnation of lord Vishnu in Hindu culture, Krishna is an expression, the expression of love, joy and enlightenment in a very higher dimension of life.

 

Posted by Cibi S

உன்னை எனக்குப் பிடிக்கவில்லை, உன்னைப் பார்த்தால் எனக்குக் கோபமாக வருகிறது என்றெல்லாம் அடுத்தவரிடம் கூறத்தானே தயங்கவேண்டும் ? யோசிக்க வேண்டும் ? ஆனால் மக்கள் அதை எளிதில் கூறிவிடுகின்றனர். உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும், உன்னுடைய இருப்பு எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது என்று அண்ணன் தம்பியிடமோ, ஒரு நண்பன் இன்னொரு நண்பனிடமோ, கணவன் மனைவியிடமோ அல்லது மனைவி கணவனிடமோ சக ஊழியரிடமோ ( கண்ணியமான முறையில் ) என்றெல்லாம் கூற  மக்கள் யோசிப்பது கூட இல்லை. உலகத்தில் பல மனச் சிக்கல்களுக்கு இந்தத் தயக்கம் தான் மூல காரணம். தயவு செய்து இனியாவது வாய் விட்டுப் பேசித் தொலையுங்கள்.

அன்பை வெளிப்படுத்துங்கள். அன்பு என்பது ஏதோ பயிற்சி முறையில் வரவழைக்கப்படும் ஒரு உணர்வல்ல. உங்களின் தன்மையே அன்பும் ஆனந்தமும் தான். இதை யாரும் மறுக்க முடியாது. இல்லையா ?? அப்படி இருக்கும் போது அன்பு என்னும் இயல்பான விஷயத்தை ஏன் மறைக்க வேண்டும் ?? தவறாக நினைத்தால் நினைத்து விட்டுப் போகிறார்கள். அவர்கள் கிடக்கட்டும். நாம் அன்பை வெளிப்படுத்திக் காட்டுவோம். மூடி மறைக்கும் விஷயமல்ல அன்பு. யாருக்கும் தெரியாமல் செய்த தவறைத்தான் மூடி மறைக்க வேண்டும். அன்பின் இயல்பே பொங்கி வழிவது தான். அதை " நான் போய் எப்படி...?" என்று நினைத்துத் தடுத்து நிறுத்தாதீர்கள். வெட்கப்படுவதை விட்டு விட்டு நீங்களே முதலில் ஆரம்பியுங்கள். தவறு செய்தால் தான் வெட்கப்பட வேண்டும். அன்பை வெளிப்படுத்துவதற்கு அல்ல. மாற்றம் உங்களில் இருந்து துவங்கட்டும்.  உங்களைப் பார்த்து எல்லோரும் ஆரம்பித்து விடுவார்கள். அதனால் இனிமேல் உரையாடலின் முடிவில் இனிமேல் love you bro, love you sis, love you mom இடம் பெறட்டும். நான் சொல்வது உண்மை. இந்தச் சிறு அன்பு அனைத்தையும் திருப்பிப் போட்டு விடும். செய்து பாருங்கள். தயக்கம் வேண்டாம் !! LOVE YOU ALL !!

பெண்  

Posted by Cibi S

நம் கலாச்சாரத்தில் ஒரு காலத்தில் ஆணுக்குப் பெண் சரிநிகராகத்தான் இருந்திருக்கிறாள் .  ஒரு ஆண் தன் குடும்பத்தை எப்போது வேண்டுமானாலும் உதறி விட்டு மேன்மையான வாழ்க்கை வாழ்வதற்கு சுதந்திரம் இருந்ததோ, அதே சுதந்திரம் ஒரு பெண்ணுக்கும் இருந்திருக்கிறது. கார்க்கி, மைத்ரேயி, சௌர்யாயணி போன்ற பல பெண்கள் அப்படித்தான் இருதிருக்கின்றனர். ஆனால் பிற்காலத்தில் வாழ்க்கையின் சூட்சுமமான பகுதிகளை அறிந்தே இராத அளவுக்கு கொடூரமான வாழ்க்கை வாழ்ந்தவர்களின் படையெடுப்பால் நிலைமை தலைகீழாகி விட்டது. அவர்கள் பொன்னையும், பொருளையும் அபகரிப்பதைப்போல, பெண்ணையும், அபகரித்ததால், பெண் பாதுகாக்கப் படவேண்டியவள் ஆனாள். அதன் பிறகு ஸ்மிருதிகள் மாற்றி எழுதப்பட்டன. அவள் பூணூல் அணியக்கூடாது என்பதில் தொடங்கி பெண்ணாய்ப் பிறந்தால் முக்தியே கிட்டாது என்பது வரை மாற்றி எழுதப் பட்டன. வாழ்வின்  ஆதார நியதிகளை விளக்குபவை ஸ்மிருதிகள். அவையே ஒருதலைப் பட்சமான பொது சமூகக் கோட்பாடுகள் எம்மாத்திரம் ? ஆகையால் பெண் பாதுகாக்கப் படவேண்டியவள் என்பதிலிருந்து மாறி பெண் அடிமைப்படுத்தப்பட்டாள். ஆண் உடலளவில் பெண்ணை விட வலிமையாய் இருந்தாலும், உண்மையில் பெண் உணர்வு அளவில் மேலோங்கியே இருக்கிறாள். தான் தாழ்வானவள் என்ற உணர்வு பெண்ணுக்குள்ளும் ஆழ்ந்து ஊரிவிட்டதோ என்னவோ. அதனால்தான் தான் உயர்வு அடையும் பொருட்டு  ஒரு ஆணைப் போல் நடந்து கொள்கிறாள். இது மிகவும் ஆபாசமானது. 

 

Posted by Cibi S

உண்மை, அன்பு, கடவுள் இவை மூன்றுக்கும் எந்த விதமான வேறுபாடும் இல்லை. இவை மூன்றும் வாழ்வின் வெவ்வேறு விதமான பரிமாணங்களே.

வாழ்க்கையின் சுழற்ச்சி :  

Posted by Cibi S


நீங்கள் கூர்ந்து கவனிதீர்களேயானால் உங்களைச் சுற்றி உள்ள அனைத்தும் வெவ்வேறு சுழற்சி முறைகளில் இயங்குவதைக் காணலாம். உங்களைச் சுற்றி உள்ள அனைத்தும் ஏதாவது ஒரு சுழற்சியின் ஒரு பாகமாய் விளங்குவதைப் பார்க்கலாம். இது தான் படைப்பின் தன்மை. அதாவது எந்த ஒரு நிகழ்ச்சியும் இடைவிடாது தொடர்ந்து நடைபெரவேண்டுமென்று நீங்கள் விரும்பினால் அதை நேராக நடக்க விடுவதை விட (linear)
சுழற்சியின் அடிப்படையில் இயக்க வேண்டும் (cycle). இதைதான் engineering இல் நாம் feedback என்று கூறுவோம். ஒட்டுமொத்த படைப்பே இவ்வாறு தான் நிகழ்ந்துள்ளது. அணுவிலிருந்து பேரண்டம் வரை, பிறப்பிலிருந்து இறப்பு வரை எல்லாமே இதன் அடிப்படையில் தான் இயங்குகிறது. அதனால் எங்குமே எதற்குமே ஆரம்பமும் இல்லை முடிவும் இல்லை. ஒரு வட்டத்திற்கு எது ஆரம்பம் ? எது முடிவு ? இதுதான் உங்கள் உங்கள் உயிரின் தன்மை. இதற்குத் தோற்றமும் இல்லை அழிவும் இல்லை. :

 

Posted by Cibi S

மனிதனுக்கு ஆயிரம் கிரகத்தில் லட்சம் ஆராய்சிகள் செய்யத் தெரியும். ஆனால் சொந்த கிரகத்தில் சந்தோஷமாக வாழ்வது எப்படி என்று மட்டும் தெரியாது. அப்படித்தானே ?

LOVE  

Posted by Cibi S

Who said the opposite of love is hate ? love does not have any opposites.


Love is not a business to get success or failure in it. love is love itself. 

குரு பூர்ணிமா '10  

Posted by Cibi S

ஆசிரியரும் குருவும் ஒருவர் அல்ல. சும்மா கற்றுத்தருபவர் அல்ல குரு. உங்கள் உள்த்தன்மையையே  மாற்றி அமைக்கக் கூடியவர் தான் குரு. கணவன் மனைவி உறவோ அல்லது காதலன் காதலி உறவோ ஜென்ம ஜென்மமாகத் தொடரும் என்பதெல்லாம் ஒரு பேச்சுக்குச் சொல்வது. அப்படியே இருந்தாலும் அது மிகவும் அரிது. ஆனால் ஒரு குருவுக்கும் அவரது மாணவனுக்கும் நிகழக் கூடியது அற்புதமானது. வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. உண்மையிலேயே அதுதான் பிறவி பிறவியாகத் தொடரக்கூடியது. ஒருவனுக்கு நல்ல குரு அமைந்து விட்டால் அவனது முன்னேற்றம் மிகவும் சுலபமாக நடந்து விடுகிறது. அவருடனான உறவு மிகவும் ஆழமானது. நம் பாரம்பரியத்தில் முந்தைய காலங்களில் குருவின் வருகை நிகழும் முன்பே அவருடனான உறவு ஏற்பட்டுவிடும். பிறகு அவருடைய வேலை எளிதில் முடிந்துவிடும். ஆனால் இப்போது அப்படி அல்ல. உண்மையான குரு கிடைப்பதே அரிது. அதிலும் ஓரிரு வார்த்தைகள் எச்சாகக் கூறினாலே மக்கள் விலகிவிடுகிறார்கள். அத்தகைய குருவின்  சிறப்பை உணர்வதற்காகத்தான் நம் கலாச்சாரத்தில் குரு பூர்ணிமா கொண்டாடப் படுகிறது. மேலும் அந்த நாளில்தான் ஆதி குருவாகிய சிவன் தன் ஞானத்தைத் தன் ஏழு முக்கியமான சீடர்களிடம் அளித்தார். அதனால் குரு பூர்ணிமாவை நம் குருவிடம் உள்ள பந்தத்தை புதுப்பித்துக்கொள்ளக் கிடைத்த மற்றுமொரு நாளாகக் கருதி குருவைக் கொண்டாடுவோம். இந்தவருடம் வரும் 25.07.10 பௌர்ணமி தினம் குருபூர்ணிமாவகக் கொண்டாடப் படுகிறது.

Life  

Posted by Cibi S

The very nature of existence is celebration.Only people who do not  know how to celebrate life will voluntarily opt for sufferings. Whomever you may be,  a prime minister or a pencil seller. You can celebrate your life at the most.

 

Posted by Cibi S

உங்கள் தெளிவின் (level of clarity) அளவு எவ்வளவோ அதைப் பொறுத்தே உங்கள் வாழ்வின் தரம் அமையும்.

 

Posted by Cibi S

மனித குலத்திற்கு ஆனந்தமாக இருப்பது எப்படி என்று கூட சொல்லித்தரவேண்டிய அளவுக்கு நிலைமை மோசமாகி விட்டது.