யோகா என்பது எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தையும் சார்ந்தது அல்ல. யோகா இந்திய கலாச்சாரத்தில், இந்திய பாரம்பரியத்தில் பிறந்த்திருந்தாலும் அது இந்தயாவுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. அதே போல இந்து மதத்துக்கும் சொந்த்தமானது அல்ல. ஏனெனில் இது ஒரு நம்பிக்கையோ அல்லது கோட்பாடோ அல்ல. இது ஒரு அறிவியல். அதனால் எப்படி ஒரு விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்ட எந்த ஒரு கண்டுபிடிப்பும், ஜாதி மத, இன வேறுபாடின்றி அதை அப்படியே ஏற்றுக் கொள்கிறோமோ, அதே போல நாம் இந்த யோக அறிவியலையும் ஏற்றுக் கொள்வது புத்திசாலித்தனம். ஆனால் யோக அறிவியலின் பயன் மற்ற கண்டுபிடிப்புகளைப் போல சாதாரண அளவோடு நின்று விடாமல் இது கற்பனைக்கும் எட்டாத பலன்களையும் சாத்தியங்களையும் அள்ளித் தரும்.
இது மற்ற அறிவியல்களைப் போல அல்லாமல் உள் அறிவியலாக இருப்பதால், இதை ஒரு set of instructions, formats போல கொடுத்தால் செயல்படாது. இதை ஒரு சரியான மூலத்திடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். இது ஏதோ புத்தகம் படித்துத் தெரிந்து கொள்ளக் கூடியதோ, போதனை கேட்பதால் தெரிந்து கொள்ளக் கொள்ளக் கூடியதோ அல்ல. தெரிந்து கொள்ளலாம். ஆனால் இதை அனுபவப் பூர்வமாக உணர்ந்து கொள்ள முடியாது. இது மிகவும் உயிரோட்டமான ஒரு தன்மையாக இருப்பதால் இதை ஒரு சரியான இடத்திலிருந்து வாங்கிக்கொள்ள வேண்டும்.
சரி இந்த யோகாவை முதன்முதலில் கண்டுபிடித்தது யார் ? எங்கு எப்போது எப்படிக் கண்டு பிடிக்கப்பட்டது ?
யோகாவின் வயது என்ன ?
யோகா என்பது யாராலும் கண்டு பிடிக்கப்பட்டது அல்ல. எப்படி புவியீர்ப்பு விசை என்பது மனிதர்கள் அதைப்பற்றி அறிந்திருந்தாலும் இல்லாவிட்டாலும், அல்லது மனிதகுலமே அதைப்பற்றி மறந்து போனாலும் அது இங்கே இருக்குமோ, அதே போல யோகாவும் நிலையானது. இதை யாரும் கண்டுபிடிக்க வில்லை. ஆனால் அநாதி காலம் முன்பே உணர்ந்து கொள்ளப்பட்டது. யோகாவின் வரலாற்றைப் பார்க்க வேண்டுமென்றால் நாம் குறைந்தது ஒரு 50,000 வருடங்களாவது பின்நோக்கிச் செல்ல வேண்டும். அந்தக் நேரத்தில் இந்த பூமியின் மாற்றி பகுதிகளில் எல்லாம், மனிதஇனம் அப்போதுதான் தன்னுடைய காட்டுமிராண்டித்தனத்தை விட்டுவிட்டு நாகரிகம் அடைந்தது தன்னுடைய அடிச்சுவடிகளை உலகத்தின் மற்ற பகுதிகளில் பதித்துக் கொண்டிருந்த நேரத்தில், இங்கே, நம் பாரத தேசத்தில் வாழ்ந்த மக்கள், இந்த வாழ்க்கையைப் பற்றி, படைப்பைப் பற்றி, படைப்பின் மூலத்தைப்பற்றி அறிந்து கொள்ள முயன்றனர். வெறும் கதைகளாக அல்லாமல், நம்பிக்கைகளாக அல்லாமல், கோட்பாடுகளாக அல்லாமல் உள்ளதை உள்ளபடியே உணர்ந்து கொள்ள முயன்றனர். ஏனெனில் எதைப் பற்றி உங்களுக்கு ஒன்றும் தெரியாதோ அதைத்தான் உங்களால் நம்ப முடியும். இப்போதும் கூட, உலகில் பெரும்பாலான மக்கள் இப்படி நம்பி நம்பியே தங்கள் முழு வாழ்க்கையையும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அதனால் நாம் முன்னமே பேசியிருப்பது போல அவர்கள் எதை நோக்கி, எதற்காக தங்கள் முழு வாழ்க்கையையும் நகர்த்துகிறார்களோ அது அவர்களுக்குக் கிடைப்பதில்லை. வெறுமனே நம்புவதால் எந்தப் பெரிய மாற்றமும் நம் வாழ்வில் வந்து விடப்போவதில்லை. இருப்பதை அப்படியே உணர்ந்து கொண்டால் எதற்காக நம்ப வேண்டும் ? அதனால் அந்த மக்கள் வெறுமனே எதையும் நம்பாமல், அதை ஒரு மேலான தளத்திலிருந்து உணர்ந்து கொள்ள விரும்பினர். இந்த இயற்கையான தேடுதல் தான் மனிதனின் தன்மை மற்ற உயிரினங்களைக் காட்டிலும் ஒரு உயர்ந்த தளத்தில் வைத்திருக்கிறது. இந்த ஒரு தேடுதலும், உள்ளுணர்வும் தான் நம்மைக் குரங்கிலிருந்து பிரித்தெடுத்து தனி ஒரு உயிரினமாக வளரச்செய்தது. இதுதான் பரிணாம வளர்ச்சியின் அடிப்படைக் காரணம். இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை. இந்த உந்துதல் மற்றும் தேடுதலின் உச்சம் தான் இப்போது நீங்களாகவும் நானாகவும் இங்கே உட்கார்ந்துகொண்டிருக்கிறது. ஆனால் அப்போதும் இந்தத் தேடுதல் நிற்கவில்லை. அதனால் தான் மனித இனம் நாகரிகத்தை நோக்கிச் சென்றது. மனிதன் பச்சையாக உண்பதை விட்டுவிட்டு சமைத்து உண்ண ஆரம்பித்தான். இதில் தொடங்கி இன்று மனித இனம் அடைந்துள்ள தொழில்நுட்ப வளர்ச்சி வரை எல்லாமே அந்த உந்துதலின் விளைவு தான். இதே உந்துதலின் அடிப்படையில் தான் நம் முன்னோர்களும் வளர்ந்த்தனர். ஆனால் அவர்கள் கொஞ்சம் ஆழ்ந்து, சற்று உள்நோக்கி வளர்ந்த்தனர். அவர்களின் தேடல் உள்முகமாக இருந்தது. அவர்கள் ஏன் வெளியில் தேடாமல் உள்நோக்கித் தேடினர் என்பதைப் பிறகு பார்ப்போம் ! அந்தத் தேடுதலின் விளைவாகக் கிடைத்தது தான் யோகா ! சரி, இந்த எப்படி நம் வரைக்கும் வந்தது ?
அந்தக் கால கட்டத்தில் இப்போது இமயமலைப் பகுதி அமைந்துள்ள இடத்திற்கு ஒருவர் வந்தார். அவர் யார்,அவரின் பெயர் என்ன, எங்கிருந்து வந்தார், அவரின் பெற்றோர் யார், அவரின் குழந்தைப் பருவம் எப்படி இருந்தது என்பனவெல்லாம் யாருக்கும் தெரியாது. அவர் இருந்தார், அவ்வளவு தான். அவர் அங்கே கண் மூடி அமர்ந்தால், அவர் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுக்கும். அதை வைத்துத்தான் அவர் உயிரோடு இருக்கிறாரா, இல்லையா என்பதை அறிந்து கொள்ள முடியும்.
அவர் தான் முதல் யோகி. யோகி என்றால் யாருடைய அனுபவத்தில், ஒரு புரிதலாக இல்லாமல், அனுபவத்தில் அவரைச் சுற்றியுள்ள அனைத்துமே, அவருக்குள் ஒரு பாகமாக விளங்குகிறதோ, இந்த பிரபஞ்சமே தன்னில் ஒரு அங்கமாக இருக்கிறதோ அவருக்கு யோகி என்று பெயர். அவர் முதலாவது யோகியாதலால் அவர் ஆதியோகி என்று அழைக்கப்பட்டார். எப்படி அவர் முதல் யோகி ஆனார் ? அவருக்கு மட்டும் என்ன விசேஷமாக நடந்தது ? அவருக்குள் மிகவும் அற்புதமானதாக ஏதோ ஒன்று நிகழ்ந்தது. இந்த உலகத்தில் இதுவரை எது உண்மையாலுமே அற்புதமானதோ, எதைநோக்கி எல்லா மனிதர்களின் தேடலும் இயற்கையாகவே செல்கிறதோ, அது அவருக்குள் தானாகவே மலர்ந்தது. அந்த நிகழ்வால் அவர் வாழ்வின் பரிமாணம் மனிதத் தன்மையிலிருந்து கடவுள்தன்மை நோக்கிச் சென்றுவிட்டது. இதைப்பற்றி இன்னும் விரிவாக பிறகு பார்ப்போம்.
அவரிடமிருந்து இதைப்பெற்றுக்கொள்ள மிகவும் விரும்பிய ஏழு பேர் 84 வருடங்களாக கடும் முயற்சி செய்தனர். அதன் பலனாக, மிகப்பெரிய காத்திருப்பின் விளைவாக, ஒரு தட்சிணாயன காலத்தில் வந்த ஒரு பௌர்ணமியன்று, இப்போது இருக்கும் யமுநோத்ரிக்கு சில அடிகள் மேலே உள்ள காந்தி சரோவர் ( 'அருள் நிறைந்த நீர்ப்பரப்பு' என்று பொருள்படும் ) என்னும் ஏரியின் கரையில் தெற்கு நோக்கி அந்த அற்புதத்தை இந்த ஏழு பேருக்கு ஆதியோகி வழங்கினார். அன்றுதான் ஆதியோகி, வெறும் யோகியாய் இருந்து ஒரு குருவின் தன்மைக்கு உயர்ந்தார். அந்த தினத்தைத் தான் ஒவ்வொரு வருடமும் யோக பாரம்பரியத்தில் "குரு பூர்ணிமா" வாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த ஏழுபேரில் ஒருவர் தான் அகத்திய முனிவர். அவர்தான் யோகாவை ஒரு மதமாக அல்லாமல், ஒரு நம்பிக்கையாக அல்லாமல், ஒரு அறிவியலாக தென்னிந்தியா முழுவதும் ஒவ்வொரு கிராமமாக சென்று பரப்பியவர்.
அப்போதிலிருந்து இந்த யோக அறிவியல் குரு-சிஷ்ய பாரம்பரிய முறையில் தொடர்ந்து பரப்பப்பட்டு, இப்போது நம் வரை இது வளர்ந்து இருக்கிறது. இப்போது இந்திய மட்டுமல்லாது, ஏனைய எல்லா நாடுகளிலும் மிகத் தீவிரமாக கற்பிக்கப்பட்டும் கற்றுக்கொடுக்கப்பட்டும் வருகிறது. இப்போது இருக்கும் இன்றைய சமூக சூழலில் யோகா கற்பது மிகவும் அவசியமாகிறது.
ஏற்கனவே கூறியது போல இது ஒரு அறிவியலாதலால் இது ஒரு செயல்முறையாகத்தான் அறிந்து கொள்ள முடியும். அதனால் இதற்காகவே பிரத்தியேகமான ஒரு ஆய்வுக் கூடமும் உண்டு !! அது என்ன ??

This entry was posted
on Saturday, January 8, 2011
at 9:39 AM
. You can follow any responses to this entry through the
comments feed
.