யோகா என்னும் அறிவியல் செயல்முறையின் ஆய்வுக்கூடம் நாம்தான். அதெப்படி ?? முதலில் 'நாம்' என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். 'நீங்கள்' என்று எதை அழைக்கிறீர்களோ அது மொத்தம் நான்கு தன்மைகளால் ஆனது. நான்கும் வாழ்வின் வெவ்வேறு விதமான பரிமாணங்கள். இந்த நான்கின் கலவையால் தான் வாழ்க்கை நிகழ்கிறது. நாம் அறிந்து கொண்டவரை இந்த நான்கின் சரிவிகித கலவையே உயிர்த்தன்மை. அவை உடல் ( body ), மனம்( mind ), உணர்ச்சி( emotions ), சக்தி நிலை( energy levels ) என்பதாகும். கொஞ்சம் கூர்ந்து கவனித்துப் பார்த்தால் முதலாவதை விட அடுத்தது சற்று சூட்சுமமான நிலையில் ( subtle state ) இயங்குவது புரியும். இந்த நான்கும் ஒன்றையொன்று சார்ந்தே இயங்குகிறது. அதாவது, நம் மனதில் பயம் தோன்றினால், இதயம் வேகமாக துடிக்கிறதே, அதைப்போல. உடலைப்பற்றி ஓரளவு புரிந்து வைத்திருப்பீர்கள். ஏனென்றால் நம் உடலைக்கொண்டே நம் உடலைப் பார்க்க முடிகிறது, தொட முடிகிறது. அதனால் நம் அனுபவத்தில் உடல் இருக்கிறது, இயங்குகிறது. உடலின் இயக்கம் பெரும்பாலும் பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல், தொடுதல் என்னும் இந்த ஐம்பொறிகளின் வாயிலாகவே நிகழ்கின்றது. இவைதான் இந்த உடலை உயிர்ப்போடு இருத்தி வைத்துள்ளது. இதைப்பற்றி இன்னும் ஆழமாக பிறகு பார்க்கலாம்.*
பின்பு மனம். இது கிட்டத்தட்ட ஒரு software ஐப்போல. புலன்களின் வாயிலாக பெறப்படும் அத்தனை அனுபவங்களும், நினைவுகளும் இந்த மனம் என்னும் software இல் பதிவாகின்றன. நமக்குத் தெரிந்த வரை ஐம்புலன்கள் hardware என்றால் இந்த மனம் அதனுடைய software ஐப்போல. உடலளவில் என்னவெல்லாம் நடக்கிறதோ, அது அத்தனையும், ஒன்று விடாமல் மனத்தில் பதிவாகின்றன. பிறகு அங்கே response இற்கு ஏற்ற stimuli களை process செய்கிறது. இதுதான் மனம். பெரும்பாலானோருக்கு இந்த மனம் கண்டதைப் பொட்டு வைக்கும் ஒரு குப்பைத்தொட்டி போலத்தான் இயங்குகிறது. மனம் சாப்ட்வேர், உடல் hardware என்பதால் மனத்தில் நடப்பவை உடலிலும், உடலில் நடப்பவை மனத்திலும் பிரதிபலிக்கின்றன. 'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்ற பழமொழி கூட இதன் அடிப்படையில் தான் உருவானது. இந்த மனம் ஆய்வு செய்கிறது. பிரித்தறிந்து பார்க்கிறது. மனத்தின் இயல்பே ஒப்பிட்டுப் பார்த்துப் புரிந்து கொள்வதுதான். வெயில் இல்லாமல் அதனால் குளிரைப் புரிந்தது கொள்ளவே முடியாது. இனிப்பு இல்லாமல் அதனால் கசப்பை அறிந்து கொள்ளவே முடியாது. கொஞ்சம் ஆழ்ந்து கவனித்துப் பார்த்தால் இது புரியும். இது இப்படித்தான் design செய்யப்பட்டுள்ளது.
அடுத்ததாக உணர்ச்சிகள். மனத்திலிருந்து உணர்ச்சிகளைப் பிரித்து அறிந்து பார்த்தால் இரண்டையும் இன்னும் நன்றாகப் புரிந்து kollalaam. மனம் என்பது வெறும் process செய்யும் இடம் மட்டுமே. அதை உயிப்போடு வைத்திருப்பது இந்த உணர்ச்சிகள் தான். இது மனத்தை விட சற்றே சூட்சுமமான தன்மையில் இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் மனத்தின் முடிவுகள் பெரும்பாலும் நிறைய மனிதருக்கு உணர்வுகளின் அடிப்படையிலேயே நிகழ்கின்றன. ஒரு உயிருக்குத் தீங்கு செய்வது என்பது மனத்திற்குத் தெரிகிறது. ஆனால் அதையும் தாண்டி நமக்கு அத உயிரினால் ஏதாவது தீங்கு நேர்ந்திருந்தால் அதற்குப் பழி வாங்கும் பொருட்டு திரும்பித் தீங்கிழைக்கும் ஒரு குணம் உணர்வுகளினால் வருகிறது. "அவன் என்னை அடித்தான் ; நானும் திரும்பி அவனை அடித்தேன்" என்றெல்லாம் வருவது இதனால் தான். நம் உணர்வுகளின் ஆதிக்க நிலைகளைப் பொறுத்து நம் ஒவ்வொருவரின் குண நலன்கள் அமைகின்றன. உங்களைச் சுற்றியே தினமும் உணர்வற்ற ஜட மனங்கள் எத்தனையோ சுற்றுவதைப் பார்க்கிறீர்கள். இல்லையா ? மனம் அற்புதமாக அழகாக வேலை செய்யும். ஆனால் அடுத்தவர் அன்பு செலுத்துவதைக் கூடப் புரிந்து கொள்ள இயலாத எத்தனையோ தெய்வீகமான மனிதர்கள் இருக்கிறார்கள். மகிழ்ச்சி, வெறுப்பு, கோபம், காமம், எரிச்சல், சலிப்பு, துக்கம், சோர்வு இவையெல்லாம் உணர்வுகளின் தாக்கங்களே. இந்த உணர்வுகளின் இயல்புகளைப் பொறுத்து நம் மனத்தின் செயல்பாடுகளும், முறையே நம் உடலின் செயல்பாடுகளும் அமைகின்றன. இந்த உணர்ச்சி நிலைகளின் மாற்றம் உடலளவில் ரசாயின மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அதற்குத் தகுந்தாற்போல் மனம் செயல் படுகிறது. அதாவது ஏற்கனவே சொன்னது போல ஒன்றின் மாற்றம் மீதி இரண்டிலும் பிரதிபலிக்கிறது. நம் உடல் என்பதே நாம் இதுவரை உட்கொண்டுள்ள உணவின் கட்டமைப்பாக உள்ளதால், நம் மனத்தையும் உணர்ச்சிகளையும் சரியான முறையில் வைத்திருக்கும் சக்தி நாம் உட்கொள்ளும் உணவிற்கு இருக்கிறது. இதையும் பற்றி விரிவாக பிறகு பார்க்கலாம்.
பின்பு சக்தி நிலை. இதைப்பற்றி ஆழமாக அடுத்த பதிவில் பார்க்கலாம். சுருக்கமாகச் சொன்னால், நாம் இரவு நன்கு தூங்கி காலையில் எழுந்தால், நம் உடல் எப்படி இருக்கிறது ? நம் மனம் எவ்வளவு சுறு சுறுசுறுப்பாக வேலை செய்கிறது ? நாம் எவ்வளவு உற்ச்சாகமாய் இருக்கிறோம் ? ஆனால், நாள் முழுதும் வேலை செய்துவிட்டு ஓய்ந்து இரவு படுக்கைக்கு வந்தால் நம் உடல், மனம், உணர்வு எல்லாம் எப்படி இருக்கின்றன ? இந்த ஒரு diffference in energy தான் சக்தி நிலை. நம்முடைய சக்தி நிலையை சற்றே மேம்படுத்திக்கொள்ள oxygen எனப்படும் ப்ரான வாயு உதவுகின்றது. இது கொஞ்சம் ஆழமா அறிவியல். அடுத்த பதிவில் இதன் கட்டமைப்பையும், நிலைகளைப் பற்றியும் பார்க்கலாம்.
இந்த நாளும் வாழ்க்கையின் நாலு தூண்கள். இந்தத் தூண்களை ஆதாரமாக வைத்துத்தான் வாழ்க்கை நடக்கின்றது. அதனால்தான் யோக பாரம்பரியத்தில் வாழ்வின் இந்த நான்கு தன்மைகளையும் யோகத்தை நோக்கிச் செலுத்துவதற்காக முறையே,
- கர்ம யோகம் - செயல்களைச் செய்வதனால் யோகத்தன்மையை அடையும் தொழில்நுட்பம்
- ஞான யோகம் - அறிவை விரிவாக்குவதால் மனத்தை யோகத்தன்மையை அடைவிக்கும் ஒரு தொழில்நுட்பம்
- பக்தி யோகம் - உணர்ச்சி நிலைகளை மேம்படுத்தி யோகத்தை அடைவிக்கும் ஒரு தொழில்நுட்பம்
- ராஜ யோகம் ( என்கிற கிரியா யோகம் ) - சக்தி நிலைகளை மேம்படுத்தி யோகத்தை நோக்கிச் செலுத்தும் ஒரு தொழில்நுட்பம்
ஆக, இந்த நான்கின் சரிவிகித கலவை தான் யோகா. வாழ்வின் நான்கு வெவ்வேறு விதமான தன்மைகளையும் ஒருமையை, யோகத்தை நோக்கிச் செலுத்த நான்கு வெவ்வேறு விதமான தொழில்நுட்பங்கள் யோக பாரம்பரியத்தில் கற்பிக்கப்படுகின்றன. பகவத் கீதையின் மொத்தமுமே இதன் விரிவாக்கம் தான். கிருஷ்ணர் என்னும் ஒரு அற்புதமான மனிதரால் யோகா என்னும் உள்நிலை அறிவியல் அவருடைய சீடரான அர்ஜுனனுக்குக் கற்பிக்கப்பட்டது. வெவ்வேறு கலாச்சாரத்தில் வெவ்வேறு விதமான வாழ்க்கை முறைகளில் இருந்து ஞானம் அடைந்த எந்த ஒரு மனிதராலும் இந்த அறிவியல் தான் கற்பிக்கப்பட்டது. இந்தியப் பாரம்பரியத்தில் அகத்தியர், பதஞ்சலி, ஸ்ரீ கிருஷ்ணர் போல மற்ற கலாச்சரங்களிலும் இருந்திருக்கின்றனர். இயேசு கிறிஸ்து யோகா தான் சொல்லிக் கொடுத்தார். நபிகள் நாயகம் யோகா தான் சொல்லிக் கொடுத்தார். புத்தர் கூட இதைத்தான் சொல்லிக் கொடுத்தார். இவர்கள் எல்லாம் ஞானம் அடைந்த்தவர்களே. பிற்காலத்தில், அதை அடுத்த தலைமுறைக்கு எடுத்து சென்றவர்களின் பொறுப்பற்ற அணுகுமுறைகளால் ஒரு காலத்தில் எது உயர்ந்த அறிவியலாக இருந்ததோ, அதுவே சடங்குகளாகவும், மூட நம்பிக்கைகளாகவும் மாற்றப்பட்டன.
This entry was posted
on Thursday, May 19, 2011
at 9:29 AM
. You can follow any responses to this entry through the
comments feed
.


