ஆசிரியரும் குருவும் ஒருவர் அல்ல. சும்மா கற்றுத்தருபவர் அல்ல குரு. உங்கள் உள்த்தன்மையையே மாற்றி அமைக்கக் கூடியவர் தான் குரு. கணவன் மனைவி உறவோ அல்லது காதலன் காதலி உறவோ ஜென்ம ஜென்மமாகத் தொடரும் என்பதெல்லாம் ஒரு பேச்சுக்குச் சொல்வது. அப்படியே இருந்தாலும் அது மிகவும் அரிது. ஆனால் ஒரு குருவுக்கும் அவரது மாணவனுக்கும் நிகழக் கூடியது அற்புதமானது. வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. உண்மையிலேயே அதுதான் பிறவி பிறவியாகத் தொடரக்கூடியது. ஒருவனுக்கு நல்ல குரு அமைந்து விட்டால் அவனது முன்னேற்றம் மிகவும் சுலபமாக நடந்து விடுகிறது. அவருடனான உறவு மிகவும் ஆழமானது. நம் பாரம்பரியத்தில் முந்தைய காலங்களில் குருவின் வருகை நிகழும் முன்பே அவருடனான உறவு ஏற்பட்டுவிடும். பிறகு அவருடைய வேலை எளிதில் முடிந்துவிடும். ஆனால் இப்போது அப்படி அல்ல. உண்மையான குரு கிடைப்பதே அரிது. அதிலும் ஓரிரு வார்த்தைகள் எச்சாகக் கூறினாலே மக்கள் விலகிவிடுகிறார்கள். அத்தகைய குருவின் சிறப்பை உணர்வதற்காகத்தான் நம் கலாச்சாரத்தில் குரு பூர்ணிமா கொண்டாடப் படுகிறது. மேலும் அந்த நாளில்தான் ஆதி குருவாகிய சிவன் தன் ஞானத்தைத் தன் ஏழு முக்கியமான சீடர்களிடம் அளித்தார். அதனால் குரு பூர்ணிமாவை நம் குருவிடம் உள்ள பந்தத்தை புதுப்பித்துக்கொள்ளக் கிடைத்த மற்றுமொரு நாளாகக் கருதி குருவைக் கொண்டாடுவோம். இந்தவருடம் வரும் 25.07.10 பௌர்ணமி தினம் குருபூர்ணிமாவகக் கொண்டாடப் படுகிறது.
This entry was posted
on Saturday, July 17, 2010
at 4:15 AM
. You can follow any responses to this entry through the
comments feed
.

